திரைப்படத்தில் வருவது போன்று, பக்தர் ஒருவர் சாமியிடம் பணம் கேட்டு, கோவில் உண்டியலில் துண்டுச்சீட்டு எழுதிப் போட்டுள்ள நிகழ்வு திருப்பரங்குன்றத்தில் அரங்கேறியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் சித்திரை மாதத்திற்கான உண்டியல் என்னும் பணி நடைபெற்றது.
இதில், ரொக்கமாக 28 லட்சத்து 78 ஆயிரத்து 855 ரூபாயும் 117 கிராம் தங்கமும், ஆயிரத்து 342 கிராம் வெள்ளியும் பக்தர்கள் கணிக்கை செலுத்திருந்தனர்.
அப்போது, பக்தர் ஒருவர் தனக்கு பணம் கேட்டு உண்டியலில் துண்டுச்சீட்டு போட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.