பழனி முருகன் கோயிலுக்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்து ஒன்றை பக்தர் இலவசமாக வழங்கியுள்ளார்.
கிரிவலப் பாதையில் கடந்த 2 மாதமாக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் பழனியைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்து ஒன்றை பழனி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்த பேருந்தை பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பெற்றுக் கொண்டார்.
பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் இந்த பேருந்து இலவசமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.