கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி யானை மீண்டும் ஊருக்குள் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சமயபுரம் கிராமம் அருகே உள்ள தனியார் நிலத்தில் நுழைந்த பாகுபலி யானை, மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்தது.
வழக்கமான வலசை பாதை அடைக்கப்பட்டதால், அருகிலேயே புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி பாகுபலி யானை இடம் பெயர்ந்து வருகிறது. யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.