உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், அம்மாவின் அன்பை போற்றி திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பற்றி தற்போது பார்க்கலாம்…!
நான் பார்த்த முதல் முகம் நீ. நான் கேட்ட முதல் மொழி நீ. அம்மா…
தைரியம்மா எதவேண்டுமானாலும் செய்யுன்னு சொல்லிட்டு தள்ளி நின்னு தன்னோட குழந்தைக்கு எதுவும் ஆகிற கூடாதுன்னு இருக்கிறது அப்பான்னா.
என் கைய புடிச்சிக்க இல்லன்ன கீழ விழுந்துறவன்னு ஒவ்வொரு அடியும் கூடவே வரது அம்மா. ஒரு தாயோட பாசமும், கண்டிப்பையும் கண்முன்னே பாத்தாலும், அத ஆழமா உணர்த்துறது என்னமோ சினிமா தான்.
ஒரு சில படங்கள்ள காட்டுற செண்டிமெண்ட் காட்சிகள் குறிப்பா அம்மா செண்டிமெண்ட் காட்சிகள் படத்த பெருசா ஹிட் அடிக்க வெச்சிடும்.
1 வயசுல இருந்து 3 வயசு வர நேரங்கெட்ட நேரத்துல எந்திச்சு தொந்தரவு பண்ண ஆரம்பிக்கிறோம். இங்க ஆரம்பிக்கிற பிராசஸ் ஸ்கூல், காலேஜ் வர விடுறதில்ல. ஒரு நாள் ரெஸ்ட் கொடுக்காம ரொம்ப தெளிவா வேல வாங்குவோம். ஆனா அந்த வயசுல நமக்கு புரியாது கொஞ்சம் கூட லீவு கொடுக்காம நம்மள பெத்தவங்கள வேல வாங்கிருக்கோன்னு. ஒரு சில படங்களுல இத கோர்வையா காட்டும் போது தான் தெரியவருது.
பொதுவா வீட்டுல சின்ன சின்ன சண்டைகள் நடக்கும் இதுல ரொம்ப ரசிக்க வைக்கிற சண்ட எது தெரியுமா? ஒரு அம்மா தான் மகளுட்ட என்னவிட உங்க அப்பாவ தான் உனக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு சொல்றது. ஆனா உண்மைய அந்த பெண் பிள்ளைங்கட்ட கேட்டா எங்க அப்பா எனக்கு கதாநாயகன், எங்க அம்மா தான் எனக்கு ரோல் மாடல்ன்னு சொல்வாங்க.
மகனுக்கு அம்மாவுக்கு இருக்குற உறவு ரொம்ப அழகு. எங்க அப்பாகிட்ட எதையாது சொன்னா திட்டிருவாரோன்ற பயத்துல பசங்க எப்போமே அம்மாகிட்ட தான் எல்லாத்தையும் ஷேர் பண்ணுவாங்க. இன்னும் சொல்லனுன்னா பசங்களுக்கு அம்மா தான் ப்ர்ஸ்ட் பிரண்ட்.
குழந்தை பருவம் வர எந்த வலியையும் தராத தாய். தான் மகனோ, மகளோ நல்ல வரனோன்றதுல சுயநலமா ஆகிடுறா. காரணம் நம்ம ஊருக்குள்ளவே இருந்தா பெரிய ஆளா வரமுடியாதுன்னு வெளியூருல வேல கிடைக்கும் போது மனசுக்குள்ள பாரம் இருந்தாலும் சந்தோசமா அனுப்பி வைக்கிறாங்க.
சில நேரத்துல பசங்க கால் பண்ணி வேல பாக்குற கஷ்டங்கள சொன்னாலும் தைரியம் சொல்றதுல்ல கில்லாடி.
சாப்பிட்டியா தூங்கினியான்னு தினம் போன் பண்ணி ஒரே கேள்விய கேக்கிற அம்மா கிட்ட கோச்சுக்குறோம்.
ஆனா ரியாலிட்டி இந்த ரெண்டு வார்த்தைகள அம்மாவ தாண்டி யாரு கேட்கபோறா கேள்விக்குறி தான். நம்ம ஸ்டேடஸ்லையும், வீண் பேச்சுலையும் புகழ்ந்துக்கிட்டு இருக்குற அம்மாவ நேருல சந்திச்சோ இல்ல போன் பண்ணியோ நல்லாருக்கியா மா சாப்பிட்டியா மா என்ன பண்றன்னு கேட்டுபாருங்க அந்த ஒரு வார்த்த போதும் உங்க அம்மாவுக்கு. எனக்கென்ன பிறந்து எல்லாத்தையும் தந்த அம்மா நீ என்றும் எனக்கு ஹூரோயின் தான்.