தேர்தல் முடிந்ததும் சிறிய கட்சிகளை காங்கிரசுடன் இணைக்க அக்கட்சி முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் சாத்ராவில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி,
இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மிகப்பெரிய தலைவர் ஒருவர், தேர்தல் முடிந்ததும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் காங்கிரஸுடன் இணைய வேண்டுமென தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதனால் தனது கட்சியை கலைத்துவிடலாம் என இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சித் தலைவர் ஒருவர் விரக்தியில் இருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சி வரிசையில் அமரக்கூடிய 10 சதவீத இடங்கள் கூட தங்களுக்கு கிடைக்காது என்பதை இண்டி கூட்டணி கட்சியினர் உணர்ந்துவிட்டதாக தெரிவித்தார்.