எப்படி பரவுகிறது ரேபிஸ் நோய்? ரேபிஸ் நோயின் அறிகுறிகள் என்னென்ன?
Sep 13, 2026, 06:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எப்படி பரவுகிறது ரேபிஸ் நோய்? ரேபிஸ் நோயின் அறிகுறிகள் என்னென்ன?

Murugesan M by Murugesan M
May 11, 2024, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாய்கள் மூலம் மனிதர்களுக்கு ரேபிஸ் எவ்வாறு பரவுகிறது, இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

ரேப்டோ என்னும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கிருமி மூலம் பரவுவதே ரேபிஸ் நோய். (NEXT) மனிதனைக் கடிக்கும் நாய் ரேபிஸால் பாதிக்கப்பட்டிருந்தால் கடிபட்டவருக்கும் வைரஸ் பரவும்.

ரேபிஸால் தாக்கப்பட்ட பூனை, ஆடு, மாடு, குரங்கு, குதிரை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் கடித்தாலும் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படும். ரேபிஸால் பாதிக்கப்பட்ட பாலூட்டி விலங்குகள் மனிதனைக் கடித்தால் அந்த வைரஸ் பரவும்.  இந்தியாவில் நாய்கள் மூலமாகவே பெரும்பாலும் ரேபிஸ் நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.

தடுப்பூசி போடப்படாத தெருநாய்கள் மூலம் அதிகம் பரவுவதால் ரேபிஸ் ‘வெறிநாய்க்கடி’ என்றழைக்கப்படுகிறது. ரேபிஸ் நோய் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

வெறிநாய் கடித்தவுடன் அந்தக் காயத்தின் வழியே மனிதனுக்குள் செல்லும் லிஸ்ஸா வைரஸ், தண்டுவடம், மூளைக்கு முன்னேறும்.  இறந்த விலங்குகளில் இருந்து ரேபிஸ் நோய் பரவ வாய்ப்புள்ளது.

வெறிநாய்க் கடியால் வரும் ரேபிஸ் நோயை குணப்படுத்தவே முடியாது. ரேபிஸ் நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம் என்கின்றனர் மருத்துவர்கள்.  ரேபிஸ் நோயால் உயிரிழக்கும் பத்தில் நான்கு பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்கிறது ஓர் ஆய்வு.

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சலும் தலைவலியும் இருக்கும். பதற்றம், மார்பு மற்றும் தொண்டைப் பகுதி தசைகளில் நடுக்கம் ஏற்படும்.

‘ஹைட்ரோஃபோபியா’ எனப்படும் நீரைக் கண்டு அஞ்சி, வெறுக்கும் தன்மை தோன்றும். பிரகாசமான ஒளி மற்றும் அதிக ஒலியை பொறுத்துக் கொள்ள முடியாது.(NEXT) சித்தபிரமை, மனஅழுத்தம், கவனச்சிதறல் ஏற்படும்.  அளவுக்கு அதிகமாக உமிழ்நீர் சுரக்கும். உடல் உறுப்புகள் செயல் இழக்கும். ரேபிஸால் பாதிக்கப்பட்டு இரண்டு முதல் 10 வாரங்களுக்குள் இந்த அறிகுறிகள் தோன்றும்.

நாய் அல்லது பிற செல்லப்பிராணிகள் கடித்தால் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு 10 முதல் 15 நிமிடங்கள் காயத்தை கழுவ வேண்டும்.  70 விழுக்காடு ஆல்கஹால், எத்தனால், பொவிடோன் ஜயோடின் பயன்படுத்தியும் காயத்தை கழுவலாம்.

முதலுதவி சிகிச்சை முடிந்தவுடன் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். கடித்தது வளர்ப்பு நாய் என்றால் அதற்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி பற்றிய விவரங்களையும் கொண்டு செல்ல வேண்டும். தெரு நாய் கடித்திருந்தால் குறைந்தது 10 நாட்களுக்காவது அதை கண்காணிக்க வேண்டும்.

மருத்துவரின் அறிவுரைப்படி அவர் சொல்லும் நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.  இப்போதெல்லாம் நாய்க்கடிக்கு தொப்புளைச் சுற்றி ஊசி போடப்படுவதில்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை.

செல்லப்பிராணிகள் கடித்தாலோ, நகத்தால் பிராண்டினாலோ உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். செல்லப்பிராணி வளர்ப்போர் கட்டாயம் அவற்றுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

வீட்டு விலங்குகளாகவே இருந்தாலும் அவற்றுடன் பழகும் போது கவனம் தேவை.  செல்லப்பிராணிகளின் செயல்பாடுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அவற்றை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

Tags: rabies treatmentrabies (disease or medical condition)rabies diseasewhat are the early signs of rabiesrabies patientwhat are rabiesrabies viruswhat is rabiesrabies in humanshistory of rabiesrabies dogsymptoms of rabiescauses of rabiesfearless against rabiesHow is rabies spread? What are the symptoms of rabies?rabies preventionsymptoms of rabies in animalsrabiesrabies hydrophobiarabies curerabies symptomsrabies symptoms in dogsrabies vaccinerabies symptoms in humans
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரசுடன் சிறிய கட்சிகளை இணைக்க திட்டம்! – பிரதமர் மோடி

Next Post

க்ரைம் தொடர்கள் பார்க்கும் சிறார்களுக்கு மனநல பாதிப்பு ஆய்வறிக்கையில் தகவல்!

Related News

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies