கேதார்நாத் கோவில் திறக்கப்பட்ட நிலையில், பயண விதிகளைத் தெரிந்துகொண்டு பக்தர்கள் வரவேண்டும் என உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு கோயில்களும் சார்தாம் என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த கோயில்கள் ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் பக்தர்களின் தரிசனத்துக்கான திறக்கப்பட்டு, குளிர்காலம் தொடங்கும்போது கோயில்களின் நடை மூடப்படுகின்றது.
அதன்படி, கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் ஆகிய மூன்று கோயில்களின் நடை நேற்று (வெள்ளிக்கிழமை) பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது.
கேதார்நாத் கோவில் திறக்கப்பட்ட நிலையில், பயண விதிகளைத் தெரிந்துகொண்டு பக்தர்கள் வரவேண்டும் என உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயண விதிகள், ஹோட்டலில் அறைகள் பதிவு செய்வது, கேதார்நாத்தில் நிலவும் காலநிலை உள்ளிட்டவற்றை அறிந்து கொண்டு பக்தர்கள் வர வேண்டும் என தெரிவித்துள்ளார். கேதார்நாத் சீதோஷ்ண நிலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுவதால் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த ஆலோசனையை தெரிவித்துள்ளார்.