ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் அல்லு அர்ஜீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஒய்.எஸ்.ஆர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகர் அல்லு அர்ஜூன் நந்தியாலா பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது இவரைக் காண ஏராளமான மக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்தனர்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக சிறப்பு துணை தாசில்தார் ராமச்சந்திர ராவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் வேட்பாளர் ஷில்பா ரவிச்சந்திர ரெட்டி ஆகியோர் மீது நந்தியாலா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.