சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பால பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், தினந்தோறும் மக்கள் அந்த வழியே பயணிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த ரயில்வே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஆரம்பத்தில் வேகமான நடைபெற்று வந்த மேம்பால பணிகள் தற்போது மந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.