தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மாதவி லதா வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என தெரிவித்தார். ஒவ்வொரு வாக்கும் குடும்பம், மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என தெரிவித்தார்.
மேலும் ஏழைகளின் வாழ்க்தை தரத்தை மாற்ற ஒவ்வொரு வாக்கும் துணை புரியும் என்றும் அவர் கூறினார்.