கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாரம்பரிய முறையில் கிராம மக்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர்.
மீன்பிடித் திருவிழாவையொட்டி தொரவளூர் கிராமத்தில் உள்ள ஏரியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் மீன் பிடித்தனர்.
ஊத்தா, வலை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய முறையில் ஏரியில் மீன் பிடித்தனர். விரால், கெண்டை, ஜிலேபி, கெளுத்தி உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.