நான்காம் கட்ட மக்களவை தேர்தலில், பகல் 1 மணி வரை 40 புள்ளி 32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. ஆந்திரா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம் உள்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நான்காம் கட்ட மக்களவை தேர்தலோடு, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
பகல் 1 மணி நிலவரப்படி, ஒட்டு மொத்தமாக 40 புள்ளி மூன்று இரண்டு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக, மேற்கு வங்கத்தில் 51 புள்ளி எட்டு ஏழு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் 48 புள்ளி ஐந்து இரண்டு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 1 மணி நிலவரப்படி, ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் 40 புள்ளி இரண்டு ஆறு சதவீத வாக்குகளும், ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் 39 புள்ளி மூன்று சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.