வாரணாசி மக்களவை தொகுதியிலிருந்து 3-வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலிருந்து போட்டியிட்ட பிரதமர் மோடி, இம்முறையும் அதே தொகுதியில் இருந்தே போட்டியிடுகிறார்.
இம்முறை வாரணாசி தொகுதிக்கு 7-ம் கட்ட வாக்குப்பதிவு நாளான ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக, கால பைரவர் கோயிலில் வழிபாடு செய்யவுள்ள அவர், பிரம்மாண்ட வாகனப்பேரணி நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேரணியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முன்னதாக, நேற்று வாரணாசி சென்ற பிரதமர் மோடி, 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணி ஒன்றை நடத்தினார்.