தென்காசியில் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு வழிகாட்டி எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
12-ம் வகுப்புத்தேர்வுக்கான முடிவுகள் அண்மையில்வெளியான நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் என்ன படிக்கலாம், போட்டித் தேர்வுக்கு தயாராவது எப்படி உள்ளிட்டவற்றை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.