தெற்கு ஆஸ்ரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் சமூக ஊடகத்தில் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் மன வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் எதிர்மறையான மாற்றங்களை உருவாக்குகிறது.
எனவே ஆஸ்ரேலியாவின் தெற்கு மாகாணத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என முதலமைச்சர் பீட்டர் மலினஸ்காஸ் அறிவித்துள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.