ஈரோடு சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தியாவிலேயே மிக அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் ஒன்றாக ஈரோடு மாவட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதற்கு ஏற்ப மாவட்டம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வந்தநிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம், வீரப்பன் சத்திரம் மற்றும் திண்டல் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.