மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஜோதிடயியல் நிபுணரும், ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு தேதி குறித்தவருமான கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட், ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் வைஜ்நாத் படேல், மற்றொரு ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் லால்சந்த் குஷ்வாஹா, தலித் சமூகத்தைச் சேர்ந்த சஞ்சய் சோன்கர் என சமூகத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த பிரதிநிதகளும் பிரதமர் மோடியை முன்மொழிந்தனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உடனிருந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக கங்கை நதிக்கரையிலும், கால பைரவர் கோயிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாரணாசி தொகுதியில் கடைசி கட்ட வாக்குப்பதிவு தினமான ஜூன் 1-இல் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.