புதுச்சேரியில் வெளியான 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவில் 97 புள்ளி 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இதில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 610 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் 11ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் 97 புள்ளி 75 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மேலும் 53 பள்ளிகளில் 100 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் 179 மாணவர்கள் நூற்றுக்கு நுறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.