திருப்பத்தூரில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்நார்சம்பட்டி பகுதியில் மக்கள் நடமாடும் பொதுவழிப் பாதையை தமக்கு சொந்தமான இடம் எனக் கூறி தாமோதரன் என்பவர் பாதையை அடைத்துள்ளார்.
இதனால் அப்பகுதி மக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபின் அப்பகுதி பெண்களே ஆக்கிரமிப்பை அகற்றினர்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.