இந்தியா உள்ளிட்ட பொருளாதாரத்தில் முன்னேறும் நாடுகளால் சர்வதேச பொருளாதாரம் வலுபெறுவதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் புகழாரம் சூட்டியுள்ளார்.
லண்டனில் பிரிட்டன் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர்,
இந்தியா, இந்தோனேஷியா, நைஜீரியா போன்ற நாடுகளின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதால், உலகப் பொருளாதாரம் முன்னேறி வருவதாக குறிப்பிட்டார்.
ஆகையால், இதுபோன்ற நிலையற்ற தருணத்தை எதிர்கொள்ள பிரிட்டன் வலிமையுடன் தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியைக் காட்டிலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச பொருளாதாரம் வீறுநடைபோட்டு முன்னேறும் என்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி பேசினார்.
பிரிட்டனில் இந்த ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.