பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் மறுமார்க்கமாக செல்லும் இரவு ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு மே. 16, 17, 18 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், இதே வழித்தடத்தில் மறுமார்க்கமான இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் ரயில்களும் அடுத்த 4 நாட்களுக்கு பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது