தமிழகத்தில் உள்ள 2 மருத்துவமனைகள் இந்த ஆண்டுக்கான காயகல்ப் விருதினை பெற்றுள்ளது.
மத்திய மாநில அரசுகள் இணைந்து ஆண்டுதோறும் மாநிலங்கள் முழுவதும் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு, தூய்மை மற்றும் சுகாதாரத்தின் அடிப்படையில் காயகல்ப் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகள் 2023-2024ம் ஆண்டுக்கான காயகல்ப் விருதை வென்றுள்ளது.