கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் அலகு குத்தியும், கிரேன் வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பழமை வாய்ந்த கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மாவிளக்கு மற்றும் ஊர் திருவிழா, கடந்த மாதம் 30 ஆம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய விழாவை முன்னிட்டு அலகு குத்தியும், பூ கரகம் எடுத்தும், கிரேன் வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.