குஜராத் மாநிலம் பொய்ச்சா பகுதியில், நர்மதை நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
சூரத் மற்றும் வதோதராவில் இருந்து நர்மதா மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற குழுவினர், பொய்ச்சாவில் நர்மதை நதியில் நேற்று நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது, சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்களின் உதவியுடன் நீரில் மூழ்கியவர்களைத் தேடி வருகின்றனர்.