சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை சீரானது.
மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மெட்ரோ – விமான நிலையம் இடையேயான நேரடி சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது.
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி மாறிச் செல்ல வேண்டும் எனவும் சென்னை மெட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டது.
தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், பிற்பகலில் இருந்து மெட்ரோ ரயில் சேவை சீரானது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.