இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் முன்மாதிரி : மகேந்திரா நிறுவனம் வெளியீடு!
Aug 15, 2025, 03:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் முன்மாதிரி : மகேந்திரா நிறுவனம் வெளியீடு!

Web Desk by Web Desk
May 15, 2024, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியின் முன்மாதிரியை மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா  தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இதை வடிவமைத்த சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவர் பாராட்டுக்களையும்  தெரிவித்துள்ளார்.  எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சாலைப் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா உட்பட உலக நாடுகள், தொடர்ந்து  புதுப்புது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதிலும்  ,அவற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்குவதிலும்  அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறது சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகம்.

வெறும் கனவு என்று சொல்லப்பட்ட பறக்கும் டாக்சியை சாத்தியமாக்கி இருக்கிறது சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகம்.  மேலும்  அடுத்த ஆண்டுக்குள்  இந்த  எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி  முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

eVTOL (Electric Vertical Takeoff and Landing) பறக்கும் டாக்சியை  e-Plane என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்தியாவின் முதல் கச்சிதமான பறக்கும்  மின்சார டாக்ஸியை உருவாக்கும் நோக்கத்துடன்,  2019 ஆம் ஆண்டு  சென்னை ஐஐடியின் முன்னாள் பொறியியல் பேரரசிரியர் சத்தியநாராயணன் சக்ரவர்த்தியால்  ePlane நிறுவனம், சென்னை ஐஐடியில் தொடங்கப் பட்டது.

எலெக்ட்ரிக் வெர்டிகல் டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL)  விமானங்களின் டெவலப்பரான ePlane நிறுவனம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) வடிவமைப்பு அமைப்பு ஒப்புதலை (DOA) பெற்றுள்ள  பறக்கும் டாக்சி ,மக்கள் பயன்பாட்டுக்கு வரத் தயார் நிலையில் உள்ளது.

நகர்ப்புறங்களில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள  e200 என்ற இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியில்  இருவர் பயணிக்கலாம் என்று தெரிவிக்கும் பேராசிரியர் சத்தியநாராயணன் சக்ரவர்த்தி, சுமார் 600 கிலோ எடை கொண்ட இந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சியுடன் பொருத்தப் பட்டிருக்கும் பேட்டரியை , ஒரு தடவை சார்ஜ் செய்தால்  200 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த டாக்சி தரையில் இறங்கவும், மீண்டும் கிளம்பவும்,15 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது என்றும் விளக்கியுள்ளார்.  இது பயன்பாட்டுக்கு வந்த பின், 25 கிலோமீட்டர் துாரத்தை வெறும் 10 நிமிடங்களிலேயே சென்று சேர்ந்து விடலாம்.

சென்னை ஐஐடியின் இந்த அளப்பரிய முயற்சிக்கு, தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ள மகேந்திரா நிறுவனத் தலைவரான ஆனந்த் மகேந்திரா, “சென்னை ஐஐடி உருவாக்கிய  பறக்கும் எலக்ட்ரிக் டாக்சி அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை காரணமாக, இனி  புதுமைப் படைப்பாளிகள் இல்லாத நாடு இந்தியா என யாராலும் கூற முடியாது” என்றும் தனது எக்ஸ் தளத்தில் ஆனந்த் மகேந்திரா பதிவு செய்துள்ளார்.

Tags: Mahindra CEO Anand Mahendraelectric flying taxiIndian Institute of TechnologyElectric Vertical Takeoff and Landing
ShareTweetSendShare
Previous Post

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே காலமானார்!

Next Post

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Related News

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies