தேனி அருகே சின்னசுருளி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை வனத்துறையினர் வெளியேற்றினர்.
மேற்கு தொடர்ச்சி மலையயில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் உள்ள சின்னசுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிகத்துள்ளது. இந்நிலையில் சின்னசுருளி அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அங்கு நீராடிய சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர்.