மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை முடக்கிய ஊழல் திமுக அரசு அண்ணாமலை குற்றச்சாட்டு!
Aug 18, 2025, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை முடக்கிய ஊழல் திமுக அரசு அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
May 15, 2024, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீனவர் நலன்காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை ஊழல் திமுக அரசு முடக்கியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கச்சத்தீவை தாரைவார்த்தது, அதன் மூலம், நாற்பது ஆண்டுகளாக தமிழக மீனவ சகோதரர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும்போதும், கொல்லப்படும்போதும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் கூட்டணியில் இருந்தும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது என தொடர்ச்சியாக தமிழக மீனவ சமுதாயத்துக்குத் துரோகம் இழைத்து வந்த திமுக, தற்போது மீண்டும் ஒரு துரோகத்தை இழைத்திருக்கிறது.

தேர்தல் வரும்போது மட்டுமே தமிழக மக்கள் மீது அக்கறை இருப்பது போல் நடித்து, அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்ற முயல்வது திமுகவுக்குப் புதிதல்ல. கடந்த ஆண்டு ஜூலை மாதம், தமிழக பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடைப்பயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது. ராமேஸ்வரம் பொதுமக்களிடையே அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பொறுக்க முடியாமல், முதலமைச்சர் ஸ்டாலின், உடனே ராமேஸ்வரம் சென்று. மீனவ சமுதாயத்துக்காக சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள், மீனவ மக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த திமுகவை செயல்பட வைக்க, தமிழக பாஜகவின் என் மண் என் மக்கள் நடைப்பயண தொடக்க விழா முழு காரணமாக அமைந்தது. பொதுமக்கள், பாஜகவின் பக்கம் திரும்புவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான், முதலமைச்சர் ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு, சுனாமி தாக்குதலில் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயப் பெருமக்களுக்கு,இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைச்  சமாளிக்கவும். பொருளாதார இழப்புகளை ஈடு செய்யவும், அரசுத் துறை, அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமுதாயத் தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து செயல்படும் வண்ணம், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று, அரசாணை எண் 215ன் படி, தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் தொடங்கப்பட்டது.

இந்தச் சங்கத்தின் மூலம், தமிழகம் முழுவதும் 236 கடலோர ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் பலனடைந்து வந்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கடந்த ஆண்டு நடத்திய ராமேஸ்வரம் மீனவர் மாநாட்டிற்காக மட்டும் இந்த சங்கம் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் முடக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, எந்தவிதப் பணிகளும் நடைபெறாமல் முடக்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கம், பாராளுமன்றத் தேர்தல் நாளுக்கு முந்தைய தினமான கடந்த 15.03.2024 அன்று, மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15.03.2024 தேதியிட்ட அரசாணை எண் 66ன் படி, எவ்வித காரணங்களும் குறிப்பிடாமல், மீனவ சமுதாய மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த சங்கம் மூடப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே, இந்தச் சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் சார்பான மூன்று வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நிலுவையில் இருக்கையில், அவசர அவசரமாக திமுக அரசு இந்தச் சங்கத்தை மூட முடிவெடுத்திருப்பது. பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், சுமார் 15 ஆண்டுகளாக, சுனாமியால் பாதிப்புக்குள்ளான மீனவ சமுதாய மக்கள் நலனுக்காகவும், எதிர்காலத்தில் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படாமல் இருக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக மேற்கொண்ட நிதிச் செலவுகளும், திமுக அரசின் இந்த முடிவால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எந்தக் காரணமும் இல்லாமல், தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதாரச் சங்கத்தினை மூட முடிவெடுத்திருப்பதன் பின்னணி என்ன என்பதை திமுக அரசு கடலோரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: DMKtamilnadu bjp presidentfishers issuefishers sangamTamilnadu Govtannamalai
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச சிலம்ப போட்டிக்கு தகுதிபெற்ற  தூத்துக்குடி மாணவிக்கு குவியும் பாராட்டு!

Next Post

நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் பிரபீர் புரக்யஸ்தாவை விடுதலை!

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies