நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சென்ற காரை, சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை பைக்கில் பின்தொடர்ந்தவர்கள் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 10 தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திசையன்விளை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மாயமான அன்று காரில் ஜெயக்குமார் சென்ற காட்சிகளும், சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரையிலும் அவரை பின்தொடர்ந்தபடியே ஒரு இரு சக்கர வாகனத்தில் 2 பேர் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. அவர்களின் முகம் தெளிவாக தெரியாததால், அவர்கள் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.