தென்காசியில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் அவசர எண்களை அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் மிகக் கனமழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும், தென்காசி மாவட்டம் முழுவதும் வரும் 18 மற்றும் 19-ம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மழையினால் பாதிக்கப்படும் பட்சத்தில், 1077 அல்லது 04633-290548 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.