ஸ்லோவாகிய பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு : பிரதமர் மோடி கண்டனம்!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்லோவாகிய பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு : பிரதமர் மோடி கண்டனம்!

Murugesan M by Murugesan M
May 16, 2024, 10:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்லோவாகிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்லோவாகியாவின் ஹன்ட்லோவா நகரில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோ, தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவர் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டார். சரிந்து விழுந்த பிரதமர் ராபர்ட் ஃபிகோவை அவரது பாதுகாவலர்கள் மீட்டு, ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து, துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீஸார் கைது செய்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராபர்ட் ஃபிகோ உயிருக்கு ஆபத்தான கட்டத்தைக் கடந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ரஷ்ய அதிபர் புதின், ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், இந்த கோழைத்தனமான செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராபர்ட் ஃபிகோ விரைவில் குணமடைய வேண்டும் என்றும், ஸ்லோவாக்கிய மக்களுடன் இந்தியா  துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags: Slovak Prime Minister shootingSlovak PM Robert FicoNarendra Modi condemnHuntlovaSlovakia
Share
Tweet
SendShare
Previous Post

தென்காசி மாவட்டத்திற்கு கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!

Next Post

வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதையில் இடுப்பளவு நீரில் சிக்கிக்கொண்ட அரசுப்பேருந்து!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies