திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதையில் இடுப்பளவு தண்ணீரில் சுமார் 60 பயணிகளுடன் அரசு பேருந்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இதனால், வள்ளியூர் ரயில்வே சுரங்கபாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக சென்ற அரசுப்பேருந்து தண்ணீரில் சிக்கி நின்றது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், 65 பயணிகளுடன் சிக்கித் தவித்த அரசு பேருந்தை மீட்டனர்.