திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலர் கண்காட்சியிக்கு அரங்குகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61 வது மலர் கண்காட்சி வரும் 17ஆம் தேதி துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது இதற்காக பூங்காவில் சுமார் 4 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்து பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகிறது .10 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக மலர் தொட்டிகள் வைப்பதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
இந்த பணிகளையும், மலர்களை வடிவமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி நேரில் ஆய்வு செய்தார்.