விண்ணப்பித்த 3 நாட்களுக்குள் பி.எஃப். முன்பணம் பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம் பெறுவதற்கான விதிகளை EPFO அமைப்பு எளிதாக்கியுள்ளது. மருத்துவச் செலவு, உயர்கல்வி, திருமணம் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை முன்பணம் பெற விண்ணப்பிக்கும்போது, 3 நாட்களுக்குள் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும்போது, தானியங்கி முறையில் முன்பணத் தொகை வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.