ஐ.பி.எல். கிரிக்கெட்டில் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ளன. இதில் குஜராத் அணி 3 ஆட்டங்களிலும், ஐதராபாத் அணி ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.