சென்னை வண்ணாரப்பேட்டையில் மாமூல் தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட மூவரை வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணிக்கடைகள், காலணி கடைகள் மற்றும் துரித உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கு ராமானுஜம் தெருவில் உள்ள கடைகளுக்குள் புகுந்த ரவுடி குள்ள ஆனந்த் தலைமையிலான 6 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டுள்ளனர்.
அப்போது மாமூல் தர மறுத்த காலணி கடை உரிமையாளர் உசேன், ஊழியர் யாசின் அரபத், உணவக உரிமையாளர் பாசிர்ஹமத் ஆகியோரை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தண்டையார்பேட்டை போலீசார், சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம் குள்ள ஆனந்த் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.