சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
அழகப்பா கல்விக் குழுமம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமி இணைந்து நடத்திய இந்த விழாவில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய மைக் ஹசி, இந்தப் பயிற்சி முகாமானது எதிர்காலத்தில் சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கு உண்டான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது என்றும், இளைய தலைமுறையினர் தங்களது விளையாட்டுத் திறனை மென்மேலும் வளர்த்து சிறந்த வீரர்களாக உருவெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.