கரூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான மன்மங்கலம், புலியூர், உப்பிடமங்கலம், வீரராக்கியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.