சென்னை, எழும்பூரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் கச்சேரிக்கான போஸ்டர் மற்றும் டிக்கெட் அறிமுக விழா நடைபெற்றது.
இது குறித்து பேசிய நிகழ்ச்சியை நடத்தும் ஈவன்ட்ஸ் தலைவர் அருண், ஜூலை 14.ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த விழா நடைபெறும் என தெரிவித்தார். இதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும், ரசிகர்களின் வசதிக்காக பார்க்கிங் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் மைதானத்திலே உணவுக் கடைகள் அமைக்கப்படும் எனவும் இந்நிகழ்ச்சியில் 55 முதல் 60 பாடல்களை பாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.