வாக்குறுதியை நிறைவேற்றிய பாஜக அரசு : சுமார் 300 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்!
Sep 14, 2026, 03:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்றிய பாஜக அரசு : சுமார் 300 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்!

Murugesan M by Murugesan M
May 16, 2024, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2019 ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் படி, இந்தியக்  குடியுரிமைக்காக விண்ணப்பித்த முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கியிருப்பதாக  மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக  தெரிவித்துள்ளது.  டெல்லியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 14 பேருக்கு  இந்திய  குடியுரிமைக்கான ஆணையை மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய்குமார் பல்லா  வழங்கினார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம்  மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த  இந்துகள் ,சீக்கியர்கள் ,பௌத்தர்கள்,சமணர்கள் , பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமையை எளிதாக்க ஏற்கெனவே இருந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய  நாடுகளில்  மதரீதியாக துன்புறுத்தப்பட்டு  2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை கிடைக்கும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு,  குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.   நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி இந்தச் சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது.  இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்குவதற்காக,மக்கள்தொகை கணக்கெடுப்பு  இயக்குநரின் தலைமையில்  ஒரு குழு அமைக்கப்பட்டது .

மேலும் ஆன்லைனில் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களையும், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும், அந்தந்த பகுதி உயர் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு  பிரமாண சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதிய குடியுரிமை திருத்த சட்டத்தின் படி குடியுரிமை கேட்டு , இதுவரை 25,000  விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச்சட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த  சீக்கியர்கள், ஹிந்துகள் உள்ளிட்ட 14 பேருக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா, இந்திய குடியுரிமைக்கான ஆணையை வழங்கினார். மேலும் விண்ணப்பித்த 300க்கும் மேற்பட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய  அரசு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில்,  புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் தபன் குமார் டேகா மற்றும் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் ஆகியோர் கலந்து கொண்டனர்.  குடியுரிமை பெற்றவர்களில் பெரும்பாலானோர்  பாகிஸ்தானைச் சேர்ந்த  இந்துகள் என்று கூறப்படுகிறது.

Tags: Ministry of Home AffairsCitizenship Amendment)Actcitizenship certificatesAjay Kumar Bhalla
Share
Tweet
SendShare
Previous Post

தமிகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் : இந்திய வானிலை ஆய்வு மையம்!

Next Post

சென்னையில் இளையராஜா கச்சேரி : ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies