நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது ஆபத்தானதா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்!
Jul 26, 2025, 07:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது ஆபத்தானதா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்!

Web Desk by Web Desk
May 16, 2024, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள  இந்தியர்களுக்கான உணவுமுறை விதிமுறைகளில் , நான் ஸ்டிக் பாத்திரங்களில் 170 டிகிரி  செல்சியசுக்கு மேல் சூடாக்கி, அதிக வெப்பத்தில் சமைப்பது நல்லதல்ல என்று  தெரிவித்திருந்தது. ஏன் அப்படி ஒரு எச்சரிக்கையை ICMR சொல்லியிருக்கிறது ? நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது ஆபத்தானதா ? புற்றுநோய் வருமா ?
இது பற்றி தற்போது பார்க்கலாம்.

ஒருகாலத்தில் மண் பண்டங்களில் சமைத்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக பித்தளை,வெண்கலம்,இரும்பு,ஈயம்,எவர்சில்வர் என மாறி மாறி ,இப்போது நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் பழக்கம் வந்துவிட்டது. முதன்முதலில் 1930களில் உருவாக்கப்பட்டது தான் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்.

சமைக்கும் நேரம் மிச்சமாகிறது என்பதாலும் , சுத்தமாக மேற்பரப்பினால் ஒட்டவே ஒட்டாது என்பதாலும் , பாத்திரத்தின் அடியும் பிடிக்காது, கழுவவதும் மிக சுலபம் என்பதாலும் ,சிறிதளவு எண்ணெய் பயன்படுத்தினாலே போதுமானது என்பதாலும், நான் ஸ்டிக் பாத்திரங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

ஆனால் , பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) எனப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட அபாயகரமான இரசாயனத்தைக் கொண்ட டெஃப்ளானைப் பயன்படுத்தி நான் ஸ்டிக் பான்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரசாயனத்தில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் உள்ளது என்பது பல ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வேதிப்பொருளே நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்த உணவை விஷமாக  மாற்றிவிடுகிறது. குறிப்பாக , இது கணையத்தைப் பாதிப்பதால் ,சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2013 ஆம் ஆண்டில் இந்த வேதியியல் பொருளே சில புற்றுநோய்கள், தைராய்டு பிரச்சினைகள் மற்றும் கருப்பை பிரச்சனைகள், குழந்தையின்மை பிரச்சனைகள் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஊட்டச்சத்து நிறுவனம் எச்சரித்திருந்தது.

அப்படியானால் இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்த கூடாதா என்றால் அதற்கு, வேறுவிதமான பதிலைத் தருகிறது ஆய்வுகள்.

ஒரு கீறல் அல்லது ஒரு வெடிப்பு உள்ள நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும் போதுதான் , அதுவும் 170 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது தான், பாத்திரத்தில் உள்ள டெஃப்ளான் என்ற வேதிப்பொருள் அதிக அளவு நச்சுப் புகை மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை உணவில் கலந்து விடுகிறது.

இதன் காரணமாகவே நான் ஸ்டிக்கில் சமைத்தால், புற்றுநோய் , நுரையீரல் பிரச்சனைகள், போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள் மட்டுமில்லாமல் ஹார்மோன் குரோபாடுகள் போன்ற நோய்களும் வரலாம் என்று என்று ICMR அறிக்கை கூறுகிறது.

மேலும், அலுமினியம் மற்றும் இரும்பு பாத்திரங்களில் அமில மற்றும் சூடான உணவுப் பொருட்களை சமைத்து உண்பதும் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்றும் ICMR அந்த அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.

இதில் தான் சமைப்பது என்ற கேள்விக்கும் ICMR பதில் சொல்லி இருக்கிறது. சுத்தம் செய்யப்பட்ட பீங்கான் சமையல் பாத்திரங்கள் பாதுகாப்பானது என்று கூறியுள்ள ICMR,
Perfluorooctanoic Acid (PFOA) , perfluorooctane sulfonic acid (PFOS) மற்றும் Polytetrafluoroethylene (PTFE) ஆகிய இரசாயன பூச்சுகள் இல்லாத கிரானைட் கல் பாத்திரங்களில் சமைப்பதும் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளது .

மண் பாண்டங்களில் சமைப்பது தான், 100 சதவீதம் பாதுகாப்பான சமையல் என்று அந்த ICMR ஆய்வறிக்கை திட்டவட்டமாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: icmrIndian Council of Medical Researchook in non-stick
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் சர்வதேச கலாச்சார மாநாடு : ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்!

Next Post

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்?

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies