மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைந்தால், சீதைக்கும் கோயில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
பீகார் மாநிலம் சீதாமரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், வாக்கு வங்கி அரசியலால் பாஜகவுக்கு ஒருபோதும் பயமில்லை என்று தெரிவித்தார். மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டபட்டதை சுட்டிக்காட்டிய அமித் ஷா, இதேபோல சீதை பிறந்த இடத்திலும் கோவில் கட்டப்படும் என உறுதியளித்தார்.
அதேசமயம் ராமர் கோவிலில் இருந்து விலகி இருப்பவர்களால் ஒருபோதும் சீதைக்கு கோவில் எழுப்ப முடியாது என காங்கிரஸை மறைமுகமாக சாடிய அவர், சீதைக்கு பிரதமர் மோடியாலும், பாஜகவாலும் மட்டுமே கோவில் நிர்மாணிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.