சூரிய புயலால் இந்திய செயற்கைகோள்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனில் வெப்பம் மிகுந்த பகுதியில் கடந்த மே 11-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெடிப்பால் உருவான பலத்த மின்காந்த புயலின் தாக்கம் பூமியில் உணரப்பட்டது. இது கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் சூரியனில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த புயல் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த சூரிய புயலால் இந்திய செயற்கைகோள்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், சுற்றுவட்டப் பாதையில் ஏற்பட்ட தாக்கத்தால் ஒருசில செயற்கைகோள்கள் 6 மடங்கு உயர் சிதைவை எதிர்கொண்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.