தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணிகள் வெற்றி பெற்றன.
பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 63ம் ஆண்டு இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் பல மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளில் சென்னை SBOA அணி, ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் சென்னை அணி ஐசிஎப் சென்னை அணி வெற்றி பெற்றன.