திருச்செந்தூரில் நகராட்சி குப்பைகளை ஏற்றிச் செல்லும் மினி ஆட்டோவை, பெண் ஊழியர் ஒருவர் இயக்கியதால் விபத்து ஏற்பட்ட நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை எடுக்க 4 மினி ஆட்டோக்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், மயிலப்புரம் பகுதியில் மினி ஆட்டோவை ஓட்டுநர் இல்லாததால், தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் தமிழரசி என்பவர் இயக்கியுள்ளார்.
இதில், மினி ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள கோவில் அர்ச்சகர் ஐயப்பனின் மகன் மற்றும் பேரன் மீது மோதியது. அவர்கள் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.