தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் திடீரென குளிர்ந்த காற்றுடன் கன மழை பெய்தது.
ஜுப்ளி ஹில்ஸ், சேர்லிங்கம் பள்ளி, குத்பல்லாபூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் இன்னல்களை எதிர்கொண்டனர்.
வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.