டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 100 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதற்காக ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் 100 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதற்காக ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான ராஜு தெரிவித்தார்.
லஞ்ச பயணம் ஹவாலா மூலம் கோவா தேர்தல் செலவுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.
மேலும் கோவா தேர்தலின் போது அவர் தங்கியிருந்த 7 ஸ்டார் ஹோட்டல் பில் தொகையை தனியார் நிறுவனம் செலுத்தியதற்கான ஆதாரம் உள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.