திண்டுக்கல் மாவட்டம், பழனியருகே நண்பரை கொலை செய்து விட்டு விபத்து போல் நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பிரவீன்குமார் என்பவர் விபத்தில் சிக்கியதாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அப்போது மருத்துவர்கள் அளித்த தகவலையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், மாரிமுத்து என்பவர் முத்துபிரவீன்குமாரை அடித்து கொலை செய்ததும், பின்னர் சாலையில் தள்ளிவிட்டு விபத்து போல் நாடகமாடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.