திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன் ஆம்னி பேருந்துகள் அணிவகுத்து நிற்பதால் இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பேருந்து நிலையம் முன்பு ஒரே நேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றிச்செல்ல தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.