கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயனம் கலந்த நீர் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 185 கனஅடியாக உள்ளது.
ஆனால், தண்ணீரை தேக்கி வைக்காமல், 240 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுவதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் ரசாயனம் கலந்த நீர் நுரையாக காட்சியளிக்கிறது.
இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.